இந்தியாவில் 6 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் : AY.4.2. உருமாறிய கொரோனா குறித்து ஐ.சி.எம்.ஆர். ஆய்வு

Oct 27 2021 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில், AY.4.2 என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, சில மாநிலங்களில், AY.4.2 என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீரில் AY.4.2 உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது வேகமாகப் பரவக்‍கூடிய வைரஸ் என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் டாக்‍டர் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த புதிய வைரசால் உயிரிழப்புகள் அதிகம் இருக்‍காது என்று கூறியுள்ளார். இந்தியாவில் இதுவரை 17 உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளாதாகவும், ஆனால், டெல்டா வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00