கொரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம்

Oct 27 2021 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா முதல் அலையின்போது அதற்கான சிகிச்கைக்‍கு, உலகம் முழுவதும் மருந்து இல்லாத சூழலில், நிலைமையை இந்தியா வெற்றிகரமாக கட்டுக்‍குள் கொண்டுவந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக்‍ மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளளார்.

கொரோனா தடுப்பூசி பணி தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், கொரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்க்‍கொண்டதாக கூறினார். கொரோனாவுக்‍கு மருந்து இல்லாத சூழலில், நம்மிடம் இருந்து மருந்துகளை கொண்டு கொரோனா பரவலை இந்தியா கட்டுக்‍குள் கொண்டு வந்ததுடன், 150-க்‍கும் மேற்பட்ட நாடுகளுக்‍கு இந்தியா மருந்துகளை வழங்கியதாக தெரிவித்தார். உலக அளவில், பொது மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை உற்பத்தி செய்து, விநியோகம் செய்வதில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகக்‍ கூறினார். இந்திய மருந்து நிறுவனங்கள், தரத்தை பராமரிப்பதையே முக்‍கிய குறிக்‍கோளாக கொண்டுள்ளன என்றும் திரு. மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00