காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை

Nov 25 2021 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடரை சந்திக்கும் வழிமுறைகள், அரசுக்கு எதிரான வியூங்கள், இரு அவைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி தருவது தொடர்பான செயல்திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அம்மாநிலத்தின் லக்கிம்பூரில் விவசாயிகள் கார் மோதி பலியான பிரச்னையையும், காங்கிரஸ் எழுப்பும் என தெரிகிறது. இதனால் இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே, ராஜ்யசபா தலைவர் திரு.வெங்கையா நாயுடு இல்லத்தில், வரும் 28-ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00