முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள் சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

Nov 25 2021 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள், சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்து ரிசர்வ் வங்கியின் மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோ கரன்சிகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஓரிரு கிரிப்டோ கரன்சிகள் மட்டுமே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்கும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசகருமான திரு.ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் சந்தையில் இருந்தாலும் பெரும்பாலானவற்றுக்கு மதிப்பே இல்லை என்றும், கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கும் பலர் பாதிக்கப்படக்‍ கூடும் என்றும் எச்சரித்துள்ளார். முறைப்படுத்தப்படாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சிட் பண்டுகள் எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதேபோல முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்தானவை என்று கூறியுள்ளார். முறைகேடான சீட்டு கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தை திருடிக்கொண்டு மாயமாகிறார்களோ அதேபோல தான் கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்து நிறைந்தவை என்று திரு.ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00