மருத்துவ இடஒதுக்‍கீட்டுக்‍கு எதிரான வழக்‍கு - மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்று முதுகலை மருத்துவப் படிப்புகளுக்‍கான கலந்தாய்வு 4 வாரங்களுக்‍குத் தள்ளிவைப்பு

Nov 25 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து 4 வாரங்களில் முடிவு செய்யப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்று, மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வுக்‍கு மேலும் 4 வாரங்கள் கால அவகாசம் வழங்கி, வழக்‍கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்ற வரம்பு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக குழு அமைத்து 4 வாரங்களில் முடிவு செய்யப்படும் - அதுவரை கலந்தாய்வும் தள்ளி வைக்கப்படும் என கூறினார். மத்திய அரசின் இந்த உத்தரவாதத்தை ஏற்று, 4 வார கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், அடுத்தக்‍கட்ட‍ விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00