டெல்லியில் மீண்டும் அதிகரிக்‍கும் காற்று மாசு - மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளும் நாளைமுதல் மூடப்படுவதாக அறிவிப்பு

Dec 2 2021 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் மீண்டும் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக, நாளைமுதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் நாளுக்‍குநாள் மோசமடைந்து வருகிறது. விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாசு அதிகரித்துள்ளதால் பொதுமக்‍கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே இருப்பதாக, காற்று தர ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்த வழக்‍கில், மாணவர்கள் சிரமப்படும் நிலையில், பள்ளிகள் ஏன் திறக்‍கப்பட்டது? என மாநில அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், காற்று மாசு காரணமாக, நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும், மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக, அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00