கர்நாடகாவில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரசார் மேற்கொள்ளும் பாத யாத்திரைக்கு அரசு தடை - கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திடீர் நடவடிக்கை

Jan 13 2022 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் மேகதாது விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை நீட்டிக்கிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க தலைமையிலான கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி, மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு 11 நாட்கள் பாதயாத்திரையை கடந்த 10-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவலுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரைக்கு ஏன் அனுமதித்தீர்கள்? என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை, கர்நாடக அரசு நிச்சயம் மேகதாது திட்டத்தை செயல்படுத்தும் என்றும், ஆனால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00