உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் போட்டியிடுகிறாரா முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்? - பா.ஜ.க. தலைவர்கள் தீவிர ஆலோசனை

Jan 13 2022 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் திரு. யோகி ஆதித்ய நாத்தை, அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, ஆளும் பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்‍கிவிட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சராக இருக்கும் திரு. யோகி ஆதித்ய நாத்தை, இந்த முறை அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அயோத்தி, மதுரா மற்றும் யோகி ஆதித்யநாத்தின் பாரம்பரிய தொகுதியான கோரக்பூர் ஆகியவற்றில் அவர் பலமுறை வெற்றி பெற்றுள்ளதால், கட்சியின் முக்கிய இந்துத்துவ முகமான ஆதித்யநாத்தின் விருப்பத் தொகுதியாகவும் அயோத்தி கருதப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், திரு. யோகி ஆதித்யநாத் அங்கு களமிறக்கப்பட்டால் அவர்களின் இந்துத்துவா திட்டத்திற்கு அது வலு சேர்க்கும் என கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00