உ.பி. தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சிவசேனா இடம்பெறாது : சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் திட்டவட்டம்

Jan 13 2022 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக்‍ கூட்டணியிலும் சிவசேனா இடம்பெறாது என்று தெரிவித்துள்ள அக்‍கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சய் ராவத், 50 முதல் 100 தொகுதிகளில் தனித்து களமிறங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்‍கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சஞ்சய் ராவத், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக்‍ கூட்டணியிலும் சிவசேனா இடம்பெறாது என்றும், அம்மாநிலத்தின் முக்‍கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியுடன் தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மாநிலத்தில் மாற்றத்தை​சிவசேனா விரும்புகிறது என்று கூறிய அவர், உத்தரப்பிரதேசத்தில் நீண்ட நாட்களாக சிவசேனா பணியாற்றி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தமுறை, சிவசேனா 50 முதல் 100 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவித்த அவர், கடந்த காலங்களில் பா.ஜ.க-வுடனான நட்பு காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00