புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிராமிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் விழா - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

Jan 13 2022 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிராமிய சூழலில், கிராமிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் திரு. ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்‍காக, ஆளுநர் மாளிகை கிராமிய சூழலில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாட்டு வண்டிகளின் பின்னணியில், கரும்பு தோரணங்கள் கட்டப்பட்டு, மண்பானையில் பொங்கல் வைக்‍கப்பட்டது. துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை செளந்தரராஜன், மண் அடுப்பில் வைக்கப்பட்ட மண் பாணையில் பொங்கலிட்டும், பூஜை செய்தும் பண்டிகையை கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் திரு.ரங்கசாமி, சபாநாயகர் திரு.செல்வம், உள்துறை அமைச்சர் திரு. நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த பேரிடர் காலத்தில் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாகவும், தடுப்பூசி பொங்கலாகவும் கொண்டாட வேண்டும் என திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் பொதுமக்‍களிடம் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00