புதிய நாடாளுமன்றக் கட்டட கட்டுமானத்திற்கான திட்ட மதிப்பு ஆயிரத்து 250 கோடியாக உயர்வு - 971 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட நிலையில் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்

Jan 21 2022 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுமான திட்டத்திற்கான திட்ட மதிப்பு 29 சதவீத அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது.

டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்‍கு அருகிலேயே புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, குஜராத்தை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் திரு. மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்‍கான அடிக்கலை நாட்டினார். இதனிடையே, 971 கோடி ரூபாயாக இருந்த புதிய நாடாளுமன்றத்துக்‍கான திட்டமதிப்பு, தற்போது கூடுதலாக 29 சதவீதம் அதிகரித்து ஆயிரத்து 250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 40 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்‍குள் நாடாளுமன்ற புதிய கட்டடம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00