கோவா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்‍கர் மகன் உத்பால் பாரிக்‍கர் அறிவிப்பு

Jan 21 2022 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவாவில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்‍காததை அடுத்து, தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்‍கரின் மகன் உத்பால் பாரிக்‍கர் தெரிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரின் பெயர் இடம்பெறவில்லை. உத்பால் பாரிக்கர் அவரது தந்தையின் தொகுதியான பனாஜி தொகுதியில் போட்டியிட கேட்டிருந்த நிலையில், அத்தொகுதியில் பா.ஜ,க சார்பில் போட்டியிட பாபுஷ் மான்செரட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உத்பால் பாரிக்கர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட உத்பால் பாரிக்கருக்‍கு, அக்‍கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்தார். இதனிடையே தனது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுபடுத்துவேன் என உத்பால் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00