5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்‍கவசம் அணிய தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு

Jan 21 2022 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்‍ கவசம் அணியத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்காத நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை என்றும், 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும் - அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய்த்தடுப்புக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கக்கூடாது - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் அபாயத்தை கண்காணிக்க வேண்டும் - அறிகுறியற்ற அல்லது லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, பொருத்தமான தடுப்பூசி, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை பெற வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00