தந்தை சொத்தில் மகளுக்‍கு பங்கு உண்டு என்ற சட்டம், 1956ம் ஆண்டுக்‍கு முன்னரும் செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Jan 21 2022 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

தந்தை சொத்தில் மகளுக்‍கு பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்‍கு முன்னரும் செல்லுப்படியாகும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயில் எழுதாமல் இறந்து விட்ட நிலையில், அவரது ஒரே மகள் தந்தையின் சொத்துக்களுக்கு அவர் உரிமை கொண்டாடினார். இதற்கு அவரது தந்தையின் சகோதரரின் மகன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சொத்துக்களுக்கு உரிமை கோரி மகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயில் எழுதாமல் இறந்த தந்தையின் சுய மற்றும் பரம்பரை சொத்துக்களை பெற அவரது மகள்களுக்கே உரிமை உள்ளது என தீர்ப்பு அளித்தனர். சொத்துக்கள் உரிமையில் இறந்தவரின் சகோதாரர்களை விட மகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 1956ல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் விசாரணை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00