பாகிஸ்தான் போரில் வென்றதன் நினைவாக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதி இடமாற்றம் - ராகுல் எதிர்ப்பு

Jan 21 2022 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி இந்தியா கேட் பகுதியில் 50 ஆண்டுகளாக எரிந்துவந்த, அமர்ஜவான் ஜோதி அணையா தீபம், தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா தீபத்துடன் இணைக்‍கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. பின் தனி நாடாக வங்கதேசம் உருவானது. அந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பின், அமர்ஜவான் ஜோதி அணையா தீபம், இன்று இடமாற்றம் செய்யப்பட்டது. தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா தீபத்துடன், இந்த தீபமும் இணைக்கப்பட்டது. இதனிடையே, அமர்ஜவான் ஜோதி அணைக்‍கப்படுவதற்கு திரு. ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்த நிலையில், தீபம் அணைக்‍கப்படவில்லை என்றும், தேசிய போர் நினைவிடத்தில் உள்ள தீபத்துடன் இணைக்‍கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00