காலையிலேயே ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் - சரிவு நிலையிலிருந்து மீண்டது வர்த்தகம்
May 13 2022 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துவந்த நிலையில், இன்றைய பங்குவர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 635 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 566 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 186 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 994 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 33 காசாக இருந்தது.