ஜப்பான் பயணத்தை முடித்துக்‍கொண்டு டெல்லி திரும்பினார் ​மோடி - நாளை தமிழகம் வருகிறார்

May 25 2022 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு டோக்‍கியோவில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து டோக்கியோவில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பை பரிசாக வழங்கினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

நாளை தமிழகம் வருகிறார்

மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 12 ஆயிரத்து 413 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக பெங்களூரு - சென்னை 4 வழி விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்கும், ஒசூர் - தருமபுரி இடையேயான இரண்டாவது மற்றும் மூன்றாவது நெடுஞ்சாலை பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00