பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு - பங்குச்சந்தை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ரூ.3 கோடி அபராதம் செலுத்த செபி நோட்டீஸ்

May 25 2022 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்த குற்றச்சாட்டிற்காக, பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்‍குனரான திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், 3 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்த திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி குற்றம் சாட்டியது. இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் முன் அனுபவம் இல்லாத திரு.ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து சலுகைகளை வழங்கியதாகவும் திருமதி.சித்ரா ராமகிருஷ்ணன் மீது புகார் எழுந்தது.

இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து திருமதி. சித்ரா ராமகிருஷ்ணனும், திரு. ஆனந்த் சுப்பிரமணியனும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பங்குச்சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்த குற்றச்சாட்டிற்காக, திருமதி. சித்ரா ராமகிருஷ்ணன், 3 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00