காஷ்மீரில் வீடு புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல டி.வி. நடிகை உயிரிழப்பு - தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்‍கை எடுக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் அறிக்கை

May 26 2022 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் பிரபல டி.வி. நாடக நடிகையை தீவிரவாதிகள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்தநிலையில், காஷ்மீர் டி.வி. நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான அம்பிரீமின் வீட்டில் புகுந்த தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர். காஷ்மீரின் பட்கம் மாவட்டம் ஹிஷோரோ பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு நடந்த இந்த தூப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த அம்பிரீமின் மற்றும் 10 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், டி.வி. நடிகை அம்பிரீமின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவத்துக்‍கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்‍கை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00