இந்தியாவில் இதுவரை மங்கிபாக்ஸ் கண்டறியப்படவில்லை - மத்திய அரசு

May 26 2022 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

மங்கிபாக்ஸ் நோய்க்கான அறிகுறி உள்ள நபர்களை சிகிச்சை மையங்களில் அனுமதித்து தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் மங்கிபாக்ஸ் வைரஸ் நோய் தற்போது பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில், மங்கிபாக்‍ஸ் நோய்க்கான அறிகுறி கொண்ட நபர்களை சிகிச்சை மையங்களில் அனுமதித்து தனிமைபடுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அவர்களின் பரிசோதனை மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மங்கிபாக்‍ஸ் கண்டறியப்படவில்லை என்றும், கொரோனா போன்று மங்கிபாக்‍ஸ் வைரஸ் தீவிரம் கொண்டது அல்ல என்றும், அதேநேரம் அதை அலட்சியமாக கருதக்கூடாது என்றும், மத்திய அரசின் கொரோனா தடுப்பு குழு தலைவர் திரு. அரோரா கூறியுள்ளார். மங்கிபாக்‍ஸ் குறித்து பேசிய ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் வைராலஜி பிரிவு தலைவர் டாக்‍டர் நிவேதிதா குப்தா, மங்கிபாக்சால் பாதிக்கப்பட்ட நபருடன் நீண்ட நேரம் முகத்துடன் முகம் தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00