மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றது விதிமீறல் : உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு

Jul 1 2022 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக திரு. ஏக்‍நாத் ஷிண்டே பதவி ஏற்றது விதிமீறல் என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்‍கு தொடர்ந்துள்ளது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍கள் 16 பேருக்‍கு மஹாராஷ்ட்ரா சட்டசபை துணை சபாநாயகர் ஏற்கனவே தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு மேற்கொள்ளப்படாத நிலையில், முதலமைச்சராக திரு. ஏக்‍நாத்​ஷிண்டே பதவி ஏற்றுக்‍கொண்டது விதியை மீறிய செயல் என சிவசேனா தலைமை கொறடா திரு.சுனில் பிரபு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. துணை சபாநாயகர் முடிவெடுக்கும் வரை 16 எம்.எல்.ஏக்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 11-ம் தேதி, எம்.எல்.ஏக்‍கள் தகுதி நீக்‍க வழக்‍கு விசாரணை நடைபெறும் அன்றே, சிவசேனாவின் புதிய மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்‍க முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷிண்டேவுக்‍கு ஆளுநர் திரு. கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00