திபெத்தையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக ஒப்புக்கொண்ட இந்திய அரசு - முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் வாஜ்பாய் நிர்வாகத்தின் தவறு என பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

Aug 4 2022 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் நிர்வாக தவறால், திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

சீனாவின் தொடர்ச்சியான எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுவந்த நிலையில், திரு. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயை விமர்சித்துள்ளார். அவர்களின் நிர்வாக தவறால்தான் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட, அசல் கட்டுப்பாட்டுக் கோட்டைக்‍ கூட சீனா தற்போது மதிப்பதில்லை என்றும், பிரதமர் திரு. மோடி மயக்‍கத்தில் இருந்தபோது லடாக்கின் சில பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாம் முடிவு செய்ய தேர்தல்கள் உள்ளன என்பதை சீனா அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00