நாளை குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தேர்தல் ஆணையம் தகவல்

Aug 5 2022 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்‍க நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் திரு.ஜெகதீப் தங்காரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருமதி.மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்‍கட்சிகளின் வேட்பாளரான திருமதி. மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்‍கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஒவ்வொரு எம்.பிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00