பெங்களூருவில் 4 வயது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த தாய் கைது : பதறவைக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை வெளியிட்ட போலீஸ்
Aug 5 2022 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து 4 வயது குழந்தையை வீசி கொலை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு அடுத்த எஸ்.ஆர். நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுஷ்மா பரத்வாஜ் என்பவர், தனது கணவர் மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். பல் மருத்துவரான சுஷ்மாவின் 4 வயது குழந்தை செவித்திறன் மற்றும் பேச்சு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், தனது 4 வயது குழந்தையை சுஷ்மா பரத்வாஜ் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து வீசி கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சுஷ்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பெற்ற குழந்தையை தாயே மாடியில் இருந்து வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பல் மருத்துவர் சுஷ்மாவை கைது செய்த போலீசார், அவரது மனநலம் குறித்து பரிசோதனை செய்யப்படுமென தெரிவித்தனர்.