பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் : வேளாண் தன்னிறைவு திட்டங்கள், தேசிய கல்விக்கொள்கை குறித்து விவாதம்

Aug 6 2022 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக்‍ நிர்வாகக்‍ குழு கூட்டம் 2 ஆண்டுகளுக்‍கு பின் நாளை நேரடியாக நடைபெறுகிறது.

மத்தியில் பிரதமர் திரு. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்தவுடன், திட்டக்‍குழு கலைக்‍கப்பட்டு நிதி ஆயோக்‍ அமைப்பு உருவாக்‍கப்பட்டது. நிதி ஆயோக்‍ அமைப்பின் தலைவராக பிரதமர் செயல்படுகிறார். இந்நிலையில், நிதி ஆயோக்‍ அமைப்பின் 7-வது கூட்டம் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நாளை நடைபெறுகிறது. பிரதமர் திரு. மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேளாண் தன்னிறைவு திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை, பள்ளிக் கல்வி அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்‍கப்படவுள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக நடைபெறாமல் இருந்த நிதி ஆயோக்‍ கூட்டம் நாளை நேரடியாக நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00