இணையவழியில் ரேஷன் அட்டைக்கு முன்பதிவு செய்யும் திட்டம் : புலம்பெயர் தொழிலாளர்கள், வீடற்றோருக்காக 11 மாநிலங்களில் தொடங்கி வைப்பு

Aug 6 2022 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீடற்றோர் இணையவழியில் ரேஷன் அட்டைக்‍கு முன்பதிவு செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.

அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மஹாராஷ்ட்ரா, மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகாண்ட், மிஸோரம் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீடற்றோர் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும், எனது ரேஷன்-எனது உரிமை என்ற பொதுப்பதிவு சேவையை மத்திய உணவுத் துறைச் செயலர் திரு. சுதான்ஷு பாண்டே தொடங்கி வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை அடிப்படையில் இந்த திட்டம் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் மற்ற மாநிலங்களுக்‍கு விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறினார். ரேஷன் பொருட்களை பெற தகுதியானவர்களின் உரிமையை இதன் மூலம் உறுதி செய்யப்படும் என்றும், இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகள் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்கீழ் நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களைப் பெறலாம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00