கேரளாவில் நடைபெற்ற ராமாயணா வினாடி வினா போட்டி : வெற்றிபெற்று அசத்திய இஸ்லாமிய மாணவர்கள்

Aug 8 2022 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் நடைபெற்ற ராமாயணா வினாடி வினா போட்டியில் இஸ்லாமிய மாணவர்கள் இருவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற ராமாயணா வினாடி வினா போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணாக்‍கர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் 5 மாணாக்‍கர்கள் வெற்றி பெற்றனர். ஐவரில், முகமது ஜபீர், முகமது பஷீத் ஆகிய 2 இஸ்லாமிய மாணவர்களும் வெற்றி பெற்றனர். தாங்கள் வெற்றி பெற்றது குறித்து பேசிய அவர்கள், ராமாயணமும், மகாபாரதமும், இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும், அனைவரும் அவற்றை படிக்‍க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அனைத்து மதங்களுமே நல்லிணக்‍கத்தையே போதிப்பதாகவும், வெறுப்புணர்வை போதிக்‍கவில்லை என்றும் கூறினர். ராமாயணத்தின் நாயகனான ராமர், நீதியின் உருவாக செயல்பட்டவர் என்றும், சகிப்புத்தன்மை மற்றும் அமைதியை போதித்தவர் என்றும், தந்தை தசரதனுக்‍கு அளித்த வாக்‍குறுதிக்‍காக தனது ஆட்சியையே தியாகம் செய்தவர் என்றும் இஸ்லாமிய மாணவர்கள் குறிப்பிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00