பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் : வழக்குப்பதிவு செய்யபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டதையடுத்து உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்‍கு முடித்துவைப்பு

Aug 10 2022 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்‍கு, அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டதையடுத்து முடிவுக்‍கு வந்தது.

சென்னையைச் சேர்ந்த கார்த்திக்‍ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த மனுவில், வேலூரைச் சேர்ந்த மார்க்‍ என்ற நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதித்துக்‍ கொடுக்‍கும் என தனது நண்பர்கள் சொன்னதைக்‍ கேட்டு இரண்டரை லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் ஆனால், கடந்த ஜுன் மாதம் முதல் வட்டி எதுவும் வரவில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார். குறைந்தபட்சம் மாதம் 2 சதவிகிதம் வட்டி அளிக்‍கப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்திருந்ததாகவும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். மேலும், காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட உயரலுவலர்களிடம் புகாரளித்தும் நடவடிக்‍கை எடுக்‍கப்படவில்லை என்றும் கார்திக்‍ தெரிவித்திருந்தார். இது குறித்த விசாரணையின் போது, மார்க்‍ நிறுவனத்துக்‍கு எதிராக வழக்‍குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்‍கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்காணிக்கவும், உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00