மேற்குவங்கத்தில் காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கிய வழக்கு : ஜார்க்கண்ட் மாநில காங். எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு இடைக்கால ஜாமின்

Aug 17 2022 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில் காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கிய அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகியோர் மேற்குவங்க மாநிலம் ஹவுராவுக்கு காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சென்ற போது சிக்கினர். அவர்களிடம் இருந்து 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமின் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகியோருக்கு 3 மாத இடைக்கால ஜாமின் வழங்கியது. விசாரணை அதிகாரிகள் முன்பு வாரத்துக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும், நகரை விட்டு வெளியே செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளுடம் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00