பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிக்‍கப்பட்டது நீதித்துறையின் மீதான நம்பிக்‍கையை அசைத்துவிட்டது - குஜராத் மதக்‍ கலவரத்தின்போது பாதிக்‍கப்பட்ட பெண் வேதனை

Aug 18 2022 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மதக்‍ கலவரத்தின் போது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விடுவிக்‍கப்பட்டது, நீதித்துறையின் மீதான நம்பிக்‍கையை அசைத்துவிட்டதாக பாதிக்‍கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட மதக்‍ கலவரத்தின் போது, Bilkis Banu என்ற பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்டனர். அந்தக்‍ குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்‍கு மும்பை சிறப்பு CBI நீதிமன்றத்தில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 11 பேருக்‍கு ஆயுள் தண்டனை விதித்து CBI நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மஹாராஷ்ட்ர உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருந்த 11 குற்றவாளிகளையும் சுதந்திர தினத்தன்று, குஜராத் பாரதிய ஜனதா அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளின் விடுவிக்‍கப்பட்ட விவகாரம், நீதியின் மீதான தனது நம்பிக்கையை அசைத்துவிட்டதாக பாதிக்‍கப்பட்ட பில்கிஸ் பானு வேதனை தெரிவித்துள்ளார். தனது சோகம், தனது நம்பிக்கை தனக்கானது மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது என கூறியுள்ள அவர், இவ்வளவு பெரிய அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், தன் பாதுகாப்பை பற்றி யாரும் விசாரிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான தனது உரிமையை தனக்கு திரும்ப வழங்குவதுடன், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00