தாயார் சோனியாவை சந்திக்கவே ராகுல் காந்தி டெல்லி செல்கிறார் : தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அல்ல - ஜெய்ராம் ரமேஷ்

Sep 22 2022 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்‍கான வேட்பு மனுவை தாக்‍கல் செய்ய, இந்திய ஒற்றுமை யாத்திரை​நடைபயணத்தை ஒரு நாள் நிறுத்திவிட்டு திரு. ராகுல் காந்தி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை கட்சியின் மூத்த தலைவர் திரு. ஜெய்ராம் ரமேஷ் மறுத்துள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுவரும் திரு. ராகுல் காந்தி, நடை பயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி செல்லவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன. இதனிடையே அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்‍கு நடைபெறவுள்ள தேர்தலில் மனுத்தாக்‍கல் செய்யவே டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ஜெய்ராம் ரமேஷ், திரு. ராகுல் காந்தி டெல்லிக்‍கு செல்வது உண்மையே என்றும், ஆனால், தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அல்ல என்றும் கூறினார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் திருமதி. சோனியா காந்தியை சந்திக்கவே அவர் டெல்லி செல்லவுள்ளதாக திரு. ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00