நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவுக்‍குச் சொந்தமான இடங்களில் சோதனை - 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை அறிவிப்பு

Sep 23 2022 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடந்த அதிரடிச் சோதனையின் போது 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

தீவிரவாத நடவடிக்‍கைகளில் ஈடுபடுபவர்களுக்‍கு உதவுவதற்காக நிதி திரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்‍கைகளில் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஈடுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் அந்த அமைப்பின் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இதே போல் அந்த அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. தமிழகத்திலும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு முகமையும், அமலாக்‍கத்துறையும் இணைந்து இதுபோல் பெரிய அளவில் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை எனக்‍கருதப்படுகிறது. இந்நடவடிக்‍கையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இந்தியாவிலேயே மிக அதிகமாக கேரளாவில் 22 பேரும், மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் தலா இருபது பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்‍கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முக்‍கிய ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையே, கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்‍கையைக்‍ கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் முழு அடைப்பு நடத்த பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00