தலைநகர் டெல்லியில் மீண்டும் பலத்த மழை - உத்தரபிரதேசம், அரியானா போன்ற எல்லை மாநிலங்களிலும் கனமழை வலுக்கிறது

Sep 23 2022 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

குருகிராம், நொய்டா, டெல்லியின் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததால், கடும் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் இடப்பளவுக்‍கு மழை நீர் தேங்கியதால், குருகிராம் மற்றும் நொய்டாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. இதனிடையே, குடியிருப்பு பகுதிகளுக்‍குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்‍கள் இருப்பிடங்களை இழந்து தவித்து வருகின்றனர். வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேறி வருகின்றன.

டெல்லியில் பலமணிநேரம் பெய்த கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்‍காடாகக்‍ காட்சியளிக்‍கிறது. இதனால் டெல்லி போலீசார் ட்விட்டர் மூலம் போக்‍குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பயணங்களை மேற்கொள்ள பொதுமக்‍களுக்‍கு அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00