காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வரலாற்று சிறப்புமிக்க பொறுப்பு : காங். தேர்தலில் போட்டியிடுவோருக்கு ராகுல் காந்தி அறிவுரை

Sep 23 2022 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வரலாற்று சிறப்புமிக்‍க பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தேர்தலில் போட்டியிடுபவர்களுக்‍கு திரு. ராகுல் காந்தி அறிவுரை கூறியுள்ளார்.

கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த திரு. ராகுல் காந்தியிடம், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் மூத்த தலைவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த திரு. ராகுல், காங்கிரஸ் தலைவர் என்பது, வரலாற்று சிறப்புமிக்க பதவி எனத் தெரிவித்தார். இது வெறும் அமைப்பு ரீதியிலான பதவி மட்டுமல்ல என்றும், சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகளின் கட்டமைப்பு என்றும், இந்தியாவுக்கான பார்வையைக் கொண்டது என்றும் கூறினார். மேலும், காங்கிரசில் ஒருவருக்‍கு ஒரு பதவி என்ற உறுதிப்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்று வலுயுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அஷோக் கெலாட், கட்சித் தலைவராகத் தேர்வானால், முதலமைச்சர் பதவியையும் தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஒருவருக்‍கு ஒரு பதவி என்ற கருத்தை திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளது முக்‍கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00