கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் : உயர்நீதிமன்றம் கண்டனம்

Sep 23 2022 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் பாப்புலர் பிரென்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முழு அடைப்பு போராட்டத்திற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொது சொத்துக்கு சேதம் ஏற்படாதபடி காவல்துறை நடவடிக்கை எடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அந்த அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், கேரளாவில் பந்த்தை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கேரள அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதுடன், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டதால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. திடீர் பந்த் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, பாப்புலர் பிரென்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முழு அடைப்பு போராட்டத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொது சொத்துக்கு சேதம் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்‍கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00