மேற்குவங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம் - பழங்கால நாணயங்களை கொண்டு அமைக்கப்பட்ட துர்கா பந்தலுக்கு வரவேற்பு : முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டு ரசிப்பு

Sep 26 2022 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில் துர்கா பூஜை களைகட்டியுள்ள நிலையில், நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட நாணயங்களை கொண்டு அமைக்‍கப்பட்டுள்ள துர்கா பந்தல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்காத்தாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜை உலக்‍ப்பிரசித்து பெற்றது. இந்த கொண்டாட்டத்தை கலாச்சார பாரம்பரியமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதனிடையே, கொரோனாவால் வழக்‍கமான உற்சாகமின்றி, கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட துர்கா பூஜை, இந்த ஆண்டு முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி கொல்கத்தா நகரம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் கொல்கத்தா நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் துர்கா பந்தல்கள், பல கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அமைக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு சுதந்திரம் பெற்று கடந்த 75 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இந்திய நாணயங்களை கொண்டு அமைக்‍கப்பட்டுள்ள துர்கா பந்தல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனை மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியும் பார்வையிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00