மைசூர் தசரா விழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு : 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் ஊர்வலம்

Sep 26 2022 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழாவை குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அவர் விழாவை தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கர்நாடகாவிற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, இன்று காலை சிறப்பு விமானம் மூலம் மைசூரு வந்தார். சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்‍கு சிறப்பு பூஜைகள் செய்து, வெள்ளி அம்பாரியில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு மலர்களை தூவி, தசரா திருவிழாவை அவர் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள Banni மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்தார். தசரா விழாவையொட்டி, 10 நாட்கள் மலர் கண்காட்சி, திரைப்பட திருவிழா, உணவு திருவிழா, இளைஞர் திருவிழா, மகளிர் திருவிழா என பல நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவின் 10-வது நாள் விஜயதசமி அன்று யானைகள் ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூரு அரண்மனையில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும். இது உலக பிரசித்தி பெற்ற ஊர்வலமாகும். இந்த ஊர்வலத்திற்கு பிறகு தசரா திருவிழா முடிவடையும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00