புதுச்சேரியில் ரயில்வே இடத்தில் இருந்த குடியிருப்புகள் திடீர் அகற்றம் : அவகாசம் அளிக்‍கவில்லை என பாதிக்‍கப்பட்டோர் புகார்

Sep 26 2022 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், ரயில்வே நிலத்திற்குச் சொந்தமான இடத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வந்த பொதுமக்‍களின் குடியிருப்புகள் திடீரென அகற்றப்பட்டதைக்‍ கண்டித்து பாதிக்‍கப்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்தை தேசிய அளவில் நவீனப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையத்திற்குட்பட்ட ராசு உடையார் தோட்டப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மக்‍கள் வசித்து வரும் நிலையில், குடியிருப்புகளை காலி செய்வதற்கு காலஅவகாசம் கேட்டு ரயில்வே நிர்வாகத்துடன் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பேச்சு நடத்தி வந்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 22 வீடுகளை தெற்கு ரயில்வே உதவி பாதுகாப்புப் படையினர் திடீரென அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு திரண்ட பாதிக்கப்பட்ட மக்கள், மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00