கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாருக்‍கு அமலாக்‍கத்துறை சம்மன் : சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஆஜராக உத்தரவு

Oct 6 2022 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.டி.கே சிவகுமார் நாளை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.டி.கே சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில், கடந்த 2018-ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 10 கோடி ரூபாய்க்‍கும் அதிகமான ரொக்‍கப்பணம் மற்றும் கணக்‍கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து அமலாக்‍கத்துறை வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்‍கில் மீண்டும் நேரில் ஆஜராக, டி.கே சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை கர்நாடகாவில் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான அனைத்துப் பணிகளையும் டி.கே சிவகுமார் மேற்கொண்டு வருகிறார். இந்தச்சூழலில் அமலக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் வழக்கு விசாரணைக்கு வேறொரு நாளில் ஆஜராக சம்மன் வழங்க வேண்டும் என டி.கே சிவகுமார் தரப்பில் மனு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00