உரிமையாளருக்காக பொறுமையாக காத்திருந்த பசு மாடு - வைரல் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

Nov 24 2022 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேய்சலுக்கு விடப்பட்ட பசு மாடு, தனது உரிமையாளருக்காக சாலையை கடக்காமல் பொறுமையாக காத்திருந்து, பின்னர் அவருடன் வீட்டிற்கு சென்ற வீடியோ, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஜீப்ரா லெவல் கிராசிங்கை கடக்காமல் சாலையோரமாக அந்த பசு மாடு பொறுமையாக காத்திருக்கிறது. போக்குவரத்து இல்லாதபோதும் தனது உரிமையாளரின் வருகைக்காக அந்த பசு மாடு, அங்கேயே காத்துக் கொண்டிருந்தது. ஒருசில வாகன ஓட்டிகள், சாலையை அந்த பசு கடந்து செல்வதற்காக வாகனங்களை நிறுத்துகின்றனர். எனினும் அங்கேயே காத்திருந்த அந்த பசு மாடு, தனது உரிமையாளர் வந்து அழைத்து சென்றதும், அவர் பின்னே நடந்து செல்கிறது. இந்த வீடியோவை பார்த்து நெகிழும் நெட்டிசன்கள், மனிதனுக்கும், விலங்கிற்கும் இடையேயான வலுவான உறவிற்கு இந்த வீடியோ சான்றென கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00