நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்‍கம் - முக்‍கிய மசோதாக்‍களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

Dec 7 2022 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. இம்மாதம் 29ம் தேதி வரை 17 அமர்வுகளாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் முதல்முறையாக குடியரசு துணைத்தலைவர் திரு.ஜகதீப் தன்கர் தலைமையில் கூட்டம் கூடியது. அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திரு.மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இடஒதுக்கீடு, இந்திய - சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்புகள் இந்தக் கூட்டத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளான இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் இரு அவைகளிலும் வெளியுறவு குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறார். இதனிடையே, குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இளம் எம்.பி.க்கள், புதிய எம்.பி.க்களுக்கு இந்த கூட்டத்தொடரில் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00