சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்‍கப்படும் விண்கலம் : சூரியனின் புறவட்டப் பாதை குறித்து ஆராய வி.ஈ.எல்.சி. என்ற உபகரணம் இணைப்பு

Jan 31 2023 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்‍கப்படும் ஆதித்யா விண்கலத்தில் விஈஎல்சி என்ற உபகரணம் பொருத்தப்படும் என்றும், இந்த உபகரணம் ​சூரியனைச் சுற்றியுள்ள புறவட்டப் பகுதி குறித்து ஆராயப் பயன்படும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களின் மையமாக விளங்கும் சூரியன் குறித்து உலக நாடுகள் ஏற்கெனவே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், தற்போது இந்தியாவும் அந்த முயற்சியில் கால் பதிக்‍கவுள்ளது. இதற்காக ஆதித்யா எல்- 1 என்ற கலத்தை அனுப்ப இந்தியா தயாராகி வரும் நிலையில், அக்‍கலத்துடன் விஈஎல்சி என்ற உபகரணத்தைப் பொருத்தும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் சூரியனின் புறவட்டப் பகுதியில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்த ஆய்வுகளுக்‍கு இந்த உபகரணம் ​பயன்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00