நாக்பூரில் ஜி20 கூட்ட அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் : பிம்டபிள்யூ காரில் வந்து திருடிச் சென்ற இரு இளைஞர்கள் கைது
Mar 18 2023 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சாலைத் தடுப்பு மீது வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை பிம்டபிள்யூ காரில் வந்த இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக்பூரில் வரும் 20 முதல் 22-ம் தேதி வரை ஜி 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதனையொட்டி நகரை அழகுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சத்ரபதி சதுக்கத்தில் இருந்து ஹோட்டல் ரேடிசன் ப்ளூ வரையிலான சாலை தடுப்பு மீது பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில்தான் காரில் வந்த இருவர் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் பூச்செடிகளைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.