எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் குடியிருக்கும் அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் - ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என கெடு விதிப்பு

Mar 25 2023 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஒரு மாதத்திற்குள் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதன் எதிரொலியாக திடீரென ராகுல்காந்தியை எம்.பி.பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மேலும், ராகுல் காந்திகு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் மக்களைவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கெடு விதித்துள்ளதால் ராகுல்காந்திக்கு மேலும் சிக்கல் வலுத்துள்ளது. இதனிடையே தண்டனை மீதான தடையுத்தரவு பெறாவிட்டால் 8 ஆண்டுகள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,எம்.பி. பதவியை ராகுல்காந்தி இழந்ததால் வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் நீதிமன்றம் அளித்துள்ளதால் அதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00