36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் LVM3 - M3 ராக்கெட் - ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது

Mar 26 2023 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

36 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் LVM3 - M3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு 23ம் தேதி ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இந்தவரிசையில் இரண்டாவது கட்டமாக மேலும் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவுடன் ஒன் வெப் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவான இந்த செயற்கைக்கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 5 ஆயிரத்து 805 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற LVM3 - M3 ராக்கெட் - திட்டமிட்டபடி புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன.

மொத்தம் 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்ட இந்த LVM3 - M3 ராக்கெட், 8 டன் எடை வரையிலான பொருட்களை தூக்கி செல்லும் திறன் கொண்டது. மொத்தம் 5.8 டன் எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களை சுமந்து சென்று புவிக்கு மேலே 405 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00