உலகின் தொன்மையான மொழியான தமிழ், நமது மொழி, இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி என பிரதமர் மோடி பெருமிதம்... திருக்குறள் மொழிப்பெயர்ப்பு நூலை பப்புவா நியூ கினியாவில் வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடி தமிழுக்கு புகழாரம்...

May 25 2023 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் பழமை வாய்ந்த மொழியான தமிழ்மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எதிரிகள் மீதும் தங்களுக்கு அக்கறை உள்ளது என்பதை எடுத்துகாட்டவே உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பயணங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தின் வெளியே பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பப்புவா நியூகினியாவில் அந்நாட்டு மொழியில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை என கூறினார். சிட்னியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் மட்டுமின்றி, முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் ஆளும் கட்சியினரும் கலந்து கொண்டது ஜனநாயகத்தின் பலம் என்றும், அவர்கள் அனைவரும் ஒன்றாக இந்திய சமூகத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்றும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, எதிரிகள் மீதும் தங்களுக்கு அக்கறை உள்ளது என்பதை எடுத்துகாட்டவே தடுப்பூசிகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளதாகவும், இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00