புதுச்சேரியில் மூதாட்டியிடம் இணையவழி மூலம் ரூ. 25 லட்சம் மோசடி செய்த நபர்களை தேடி வரும் போலீசார்

May 26 2023 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் மூதாட்டியிடம் 25 லட்சம் ரூபாய் வரை இணையவழியில் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சண்முகபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், கடந்த 4 மாதங்களுக்‍கு முன்பு, லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி 12 லட்சம் ரூபாய் வரை ஏமாந்துள்ளார். இதனையடுத்து 2 மாதங்களுக்‍கு பின்னர், ராஜேஸ்வரியின் செல்ஃபோனை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும், அவரிடம் பணமோசடி செய்த நபரை பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர 13 லட்சம் ரூபாய் ஆகும் எனக்‍கூறியதால், அவர் அனுப்பிய வங்கி எண்ணுக்‍கு ராஜேஸ்வரி பல தவணைகளாக பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் அந்த செல்ஃபோன் எண் ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு இணைய வழி மோசடி நபர்களை தேடிவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00