தெலங்கானாவில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து 2.5 கிலோ நகை கொள்ளை : சிசிடிவி காட்சி மூலம் 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

May 29 2023 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் வருமானவரி துறை அதிகாரிகள் என கூறி நகை கடைக்குள் புகுந்து இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். செகந்திராபாத்தில் உள்ள நவக்கர் கோல்டு நகை கடைக்குள் புகுந்த நான்கு பேர் தாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறி உரிமையாளரை மிரட்டியுள்ளனர். பின்னர் கடையை சோதனையிடுவது போல் நடித்து, கடையில் இருந்த இரண்டரை கிலோ நகைகளை ஒரு பையில் போட்டு கொண்ட அவர்கள், உரிய விளக்கத்தை அளித்துவிட்டு நகையை பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு நகைகளை எடுத்து சென்று விட்டனர். கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படவே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலி வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00