அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது - வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகவல்
Sep 18 2023 8:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது என்பதால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களை திசைதிருப்பும் செயலை மட்டுமே செய்து வரும் பாஜக தலைமையிலான மத்திய அரசை பதவியிலிருந்து கீழிறக்க வேண்டும் என்றார். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு இமாச்சல் மற்றும் கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று எனக் குறிப்பிட்ட கார்கே, நமது தனிப்பட்ட விருப்பங்களை புறந்தள்ளி சர்வாதிகார அரசை நீக்கி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.