ஜம்மு காஷ்மீரின் கோகர்நாக்கில் 120 மணி நேரத்தைக் கடந்து நீடிக்கும் ராணுவ வேட்டை - சாதகமான இடத்தில் பதுங்கியிருந்து தாக்கும் பயங்கரவாதிகள்
Sep 18 2023 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின் கோகர்நாக்கில் பயங்கரவாதிகளுடனான பாதுகாப்புப் படையினரின் மோதல் 120 மணி நேரத்தைக் கடந்தும் நீடிக்கிறது. காடோலின் அடர்ந்த காடுகளுக்குள் கமாண்டோக்கள் உட்பட ஆயிரக்கணக்கான துருப்புக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
அடர் வனம், மலை உச்சியில் பாதுகாப்பாக மறைந்திருந்து தாக்கும் வசதி ஆகியவற்றால், பயங்கரவாதிகள் சண்டையை நீட்டிக்க வைத்து வருகின்றனர். மிகத் தந்திரமாக தங்களுக்குச் சாதகமான இடத்தில் பதுங்கியிருந்து தாக்கும் புதிய உத்தியை பயங்கரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதை இது காட்டுவதாக கூறப்படுகிறது. மிகப் பெரிய சவாலான பணி என்றாலும் பயங்கரவாதிகளை கொல்வதில் ராணுவம் உறுதி காட்டி நிற்கிறது.